தில்லியில் கைபற்றப்பட்ட குண்டு ட்ரோன்மூலம் காஷ்மீர் பஞ்சாப் வழியாக தில்லி வந்திருக்கலாம் திடுக்கிடும் தகவல் !!

தலைநகர் தில்லியில் உள்ள காஸிபூர் பூ சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு சக்திவாய்ந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த வெடி குண்டை தேசிய பாதுகாப்பு படையின் கமாண்டோ வீரர்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு சென்று வெடிக்க வைத்து செயலிழக்க செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி பாதுகாப்பு அமைப்புகள் தீவிரமாக விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இந்த குண்டு பல பாகங்களாக பாகிஸ்தானில் இருந்து ஆளில்லா விமானம் மூலமாக பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு கடத்தப்பட்டு இருக்கலாம் எனவும்

பின்னர் பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இருந்து சாலை மார்க்கமாக தில்லி கொண்டு வரப்பட்டு இணைக்கப்பட்டு இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.