இந்தியாவுடன் சமாதானம் விரும்பும் பாகிஸ்தானுடைய புதிய பாதுகாப்பு கொள்கை !!

  • Tamil Defense
  • January 14, 2022
  • Comments Off on இந்தியாவுடன் சமாதானம் விரும்பும் பாகிஸ்தானுடைய புதிய பாதுகாப்பு கொள்கை !!

பாகிஸ்தான் தனது வரலாற்றில் முதல் முறையாக உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கொள்கைகளை ஒருங்கிணைக்கும் பாதுகாப்பு கொள்கையை வெளியிட உள்ளது.

இந்த புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையில் இந்தியா உட்பட அண்டை நாடுகளுடன் சமாதானத்தை பாகிஸ்தான் ஏற்படுத்தி கொள்வதற்கான சாராம்சங்கள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த பாதுகாப்பு கொள்கை காஷ்மீருக்கு முக்கியத்துவம் அளிக்காமலேயே இந்தியாவுடன் மிகவும் வெளிப்படையான வர்த்தக உறவுகளை அமைத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிகிறது.

2022 முதல் 2026 வரையிலான ஐந்த ஆண்டு காலகட்டத்திற்கான இந்த பாதுகாப்பு கொள்கையை பாகிஸ்தானுடைய தேசிய பாதுகாப்பு கமிட்டி முன்மொழிந்துள்ளது.

வருகிற வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த 100 பக்க தேசிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.