ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க இருந்த பாக் பிரதமர் இம்ரானுடைய கனவு தகர்ந்தது !!

  • Tamil Defense
  • January 31, 2022
  • Comments Off on ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க இருந்த பாக் பிரதமர் இம்ரானுடைய கனவு தகர்ந்தது !!

சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற உள்ள பனிக்கால ஒலிம்பிக்ஸின் துவக்க விழாவில் ரஷ்ய அதிபர் புடின் , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை வாய்ப்பாக கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினை சந்திக்க திட்டமிட்டு இருந்தார் ஆனால் இக்கனவு தகரந்துள்ளது.

காரணம் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் எந்த நாட்டு தலைவரையும் சந்திக்க போவதில்லை என க்ரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் பங்கேற்க உள்ளார் என்பது கூடுதல் தகவல் ஆகும்.