பத்ம விபூசன் விருது பெற்ற மறைந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்

  • Tamil Defense
  • January 26, 2022
  • Comments Off on பத்ம விபூசன் விருது பெற்ற மறைந்த சிடிஎஸ் ஜெனரல் பிபின் ராவத்

இந்திய பாதுகாப்பு படைகளின் முதல் ஒருங்கிணைந்த படைத் தளபதி பிபின் ராவத் அவர்களுக்கு ( மரணத்திற்கு பிறகு ) பத்ம விபூசன் வழங்கப்பட்டது.குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மற்றும் ஆளுமைகளுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த படைத் தளபதி சிடிஎஸ் பிபின் ராவத் அவர்களுக்கு பத்ப விபூசன் வழங்கப்பட்டது.இது இரண்டாவது உயரிய சிவிலியன் விருது ஆகும்.

சிடிஎஸ் ராவத் அவர்கள் தமிழகத்தின் ஊட்டியில் நடைபெற்ற வானூர்தி விபத்தில் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

சிடிஎஸ் ராவத் தவிர மைக்ரோசாப்ட் தலைமை சத்ய நாதெள்ளா மற்றும் கூகுள் தலைமை சுந்தர் பிச்சை ஆகியோருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.

இந்த வருடம் 128 பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.