கோவா தளத்தில் தனது பணியை தொடங்கும் புதிய பொசைடான் விமானங்கள்

  • Tamil Defense
  • January 2, 2022
  • Comments Off on கோவா தளத்தில் தனது பணியை தொடங்கும் புதிய பொசைடான் விமானங்கள்

கோவாவில் இந்திய கடற்படைக்கு சொந்தமாக ஐஎன்எஸ் ஹான்சா கடற்படை தளம் உள்ளது.இங்கு பி-8ஐ பொசைடார் விமானங்களை நிலைநிறுத்த கடற்படை முடிவு செய்து அதற்கு புதிய விமானங்களையும் ஆர்டர் செய்தது.

இந்நிலையில் கடந்த 30 டிசம்பர் 2021 அன்று இரு பொசைடான் விமானங்கள் கோவா தளம் வந்ததை அடுத்து இனி கோவா தளத்தில் இருந்து ஆபரேசன்களை இந்த விமானங்கள் மேற்கொள்ள உள்ளது.

உள்நாட்டு தயாரிப்பு சில உபகரணங்களையும் பறந்தல் சோதனையும் முடித்த பிறகு இந்த விமானங்கள் படையில் இணைக்கப்பட்டுள்ளன.

புதிய விமானங்களை மிக்-29கே விமானங்கள் வரவேற்றன.இந்த கடற்படை முதல் தொகுதி எட்டு P-8I விமானங்கள் 2013ல் ஆர்டர் செய்தது.இவை தமிழகத்தில் அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளத்தில் இருந்து செயல்பாட்டில் உள்ளன.

இரண்டாம் தொகுதியாக 4 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டு அவை கோவாவில் உள்ள ஹன்சா தளத்தில் நிலைநிறுத்தப்படும்.