காஷ்மீர் பிராந்திய காவல்துறை ஐ.ஜி விஜயகுமார் காஷ்மீரில் கடந்த 30 வருடத்தில் முதல்முறையாக பயங்கரவாதிகளின் எண்ணிக்கை 200க்கு கீழ் சென்றுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது 86 பயங்கரவாதிகள் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், சமீபத்தில் இரண்டு வெளிநாட்டு பயங்கரவாதிகள் உட்பட 6 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படைகளால் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
அதே போல் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த காஷ்மீரிகளின் எண்ணிக்கை 180ல் இருந்து 130 ஆக குறைந்துள்ளது கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து அமெரிக்க M4 மற்றும் ரஷ்ய AK-47 துப்பாக்கிகள் கைபற்றப்பட்டு உள்ளன.