இரண்டாவது முறையாக ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வடகொரியா !!

  • Tamil Defense
  • January 7, 2022
  • Comments Off on இரண்டாவது முறையாக ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள வடகொரியா !!

நேற்று காலை வடகொரியா இரண்டாவது முறையாக ஒரு ஹைப்பர்சானிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்து கிழக்கு ஆசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதமும் வடகொரியா இதை போல ஒரு ஹைப்பர்சானிக் ஏவுகணை சோதனையை முதல் முறையாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அமெரிக்கா தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வட கொரியாவின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு தங்களது கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

வடகொரிய அரசோ அந்நாட்டு அரசு ஊடகத்தில் இந்த சோதனைகள் மூலமாக வடகொரிய ராணுவத்தின் நவீனமயமாக்கல் மற்றும் வலிமை மற்றொரு புதிய அடியை தொட்டுள்ளதாக கூறியுள்ளது.