புதிய துணை ராணுவ தளபதி நியமனம், அடுத்த CDS நியமனத்தில் ஒரு படி முன்னேற்றம் !!

  • Tamil Defense
  • January 21, 2022
  • Comments Off on புதிய துணை ராணுவ தளபதி நியமனம், அடுத்த CDS நியமனத்தில் ஒரு படி முன்னேற்றம் !!

இந்திய தரைப்படையின் துணை தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார் இதன் மூலம் அடுத்த CDS நியமனத்தில் மற்றொரு படி முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் நரவாணே தான் அடுத்த கூட்டுபடை தலைமை தளபதியாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ஆகவே முதலில் அடுத்த தரைப்படை தலைமை தளபதிக்கான அதிகாரியை இப்போதே இறுதி செய்ய வேண்டியதாகிறது.

ஆகவே ஜெனரல் நரவாணே கூட்டுபடை தலைமை தளபதியாக நியமிக்கபடும் பட்சத்தில் லெஃப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இந்திய தரைப்படையின் தளபதியாக பொறுப்பேற்று கொள்வார் அவர் விட்டு செல்லும் துணை தரைப்படை தளபதி பொறுப்பை மற்றொரு மூன்று நட்சத்திர அதிகாரி நிரப்புவார்.

மேலும் கூட்டுபடைகள் தலைமை தளபதியை தேர்வு செய்யும் குழுவில் உள்ள ராணுவ அதிகாரிகள் அடுத்த CDS தரைப்படை அதிகாரியாக இருக்க வேண்டும் என கருதுவதும் மேலும் ஜெனரல் நரவாணே முப்படை தளபதிகளிலேயே மூத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.