தில்லி காவல்துறை மத்திய இந்தியாவில் நக்சல்கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடிய அனுபவம் கொண்ட CRPF கமாண்டோ வீரர்களை கொண்டு ஒரு அதிவிரைவு படையை உருவாக்கி உள்ளது.
இந்த பணையணியில் 50 கமாண்டோ வீரர்கள் இருப்பர், இவர்கள் CRPFல் தான் பணியாற்றுவாரகள் ஆனால் தலைநகர் தில்லியில் தில்லி காவல்துறை சார்பில் முகாமிட்டு பணியாற்றுவர்.
தில்லியில் எங்கு தாக்குதல் நடந்தாலும் வெறுமனே 15 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு சென்று பதிலடி கொடுப்பார்கள், மேலும் இரவு பகல் என அனைத்து சுழலிலும் செயல்படுவார்கள்.
இவர்களுக்கு AK-47, MP-5 SMG, SNIPER துப்பாக்கிகள், இரவில் பார்க்கும் கருவிகள், சுவர்களை ஊடுருவும் ரேடார்கள் ஆகியவை வழங்கப்படும், இவர்கள் அனைவருமே வீர தீர விருது பெற்றவர்கள் என்பது கூடுதல் சிறப்பு.