சீனாவை எதிர்நோக்கிய 14ஆவது கோர் படையணிக்கு புதிய தளபதி நியமனம் !!

  • Tamil Defense
  • January 7, 2022
  • Comments Off on சீனாவை எதிர்நோக்கிய 14ஆவது கோர் படையணிக்கு புதிய தளபதி நியமனம் !!

லடாக் மாநில தலைநகர் லே நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தரைப்படையின் 14ஆவது கோர் படையணி சீனாவை பிரதானமாக எதிர்நோக்கி கண்காணிக்கும் பொறுப்பை கொண்டதாகும்.

தற்போது கடந்த இரண்டு ஆண்டுகளாக சீனாவுடன் மோதல் நீடித்து வரும் நிலையில் இந்த படையணி மற்றும் அதன் செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

தற்போது இந்த படையணியின் புதிய தளபதியாக லெஃப்டினன்ட் ஜெனரல் அனிந்த்யா செங்குப்தா பொறுப்பேற்று கொண்டுள்ளார். இவருக்கு முன் லெஃப்டினன்ட் ஜெனரல் பி ஜி கே மேனன் இப்படையை வழிநடத்தியது குறிப்பிடத்தக்கது.