இஸ்ரோவின் புதிய தலைவர் யார் இவர் இவருடைய தகுதிகள் என்ன ??

  • Tamil Defense
  • January 13, 2022
  • Comments Off on இஸ்ரோவின் புதிய தலைவர் யார் இவர் இவருடைய தகுதிகள் என்ன ??

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி திரு. எஸ். சோம்நாத் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு முதல் திருவனந்தபுரம் நகரில் அமைந்துள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த இவர் TKM பொறியியல் கல்லூரியில் பயின்று பின்னர் பெங்களூர் நகரில் அமைந்துள்ள IIScயில் ஏரோஸ்பேஸ் பொறியியலில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார்.

GSLV MK-3 மற்றும் PSLV ஆகிய ராக்கெட்டுகளின் வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்தில் மிக முக்கியமான பங்காற்றியுள்ளார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

1985ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் இணைந்த அவர் VSSC மையத்தில் தனது பயணத்தை துவங்கினார் தற்போது அதன் இயக்குனராக உள்ள அவர் இடையில் LPSC எனப்படும் திரவ எரிபொருள் ஆய்வு மையத்தின் இயக்கனராகவும் பணியாற்றி உள்ளார்.

மேலும் இவர் ஏவு வாகனத்தின் வடிவமைப்பு, பொறியியல், கட்டுமானம், டைனமிக்ஸ், ஒருங்கிணைப்பு வடிவமைப்பு மற்றும் முறைமைகள் போன்றவற்றில் மிகவும் தேர்ந்தவர் என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ககன்யான் (இந்தியர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டம்) திட்டம் போன்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இவரது தேர்வு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.