
சமீபத்தில் இந்திய கடற்படையிடம் ஐ.என.எஸ். விசாகப்பட்டினம் ரக நாசகாரி போர்கப்பல் கடல் சோதனைகளுக்காக ஒப்படைக்கப்பட்டது.
வரும் ஆகஸ்டு மாதம் இந்த கப்பலை படையில் இணைக்கும் நோக்கத்தோடு இந்திய கடற்படை கப்பலின் பல்வேறு வகையான திறன்களை முழு அளவில் சோதனை செய்து வருகிறது.
இந்த நிலையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உருவாக்கிய புதிய கடல்சார் பிரம்மாஸ் ஏவுகணையை இக்கப்பலில் இருந்து ஏவி சோதனை செய்துள்ளனர்.
கப்பலில் இருந்து ஏவப்பட்டு கடலில் உள்ள எந்த இலக்கையும் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட இது தனது இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக இந்திய கடற்படை செய்தி வெளியிட்டுள்ளது.
ஆக படையில் இணையும் போதே ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் நாசகாரி கப்பல் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் சேவையை துவங்க உள்ளது என்பது தெரிய வருகிறது.