
சீன தயாரிப்பு பொருட்களின் தரம் உலகளாவிய ரீதியில் கேள்விக்குறி என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது தான் ஆனால் நட்பு நாடுகள் கூட சீன தயாரிப்புகளை ஒதுக்கும் அளவுக்கு அவற்றின் தரம் மோசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேபாள அரசு சீனாவிடம் இருந்து வாங்கிய 6 பயணிகள் விமானத்தை பொது மக்கள் பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது
தரத்தில் உள்ள பிரச்சினைகள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு கருதி 6 விமானங்கள் பறக்க தடை விதித்து நிறுத்தி போட உத்தரவிட்டுள்ளது.
இந்த விமானங்களின் தரத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் அடிக்கடி பழுதடைவதும் மேலும் அதிக பராமரிப்பு செலவுகளும் இதற்கு காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.