60 சுதேசி கடல்சார் பல திறன் ஹெலிகாப்டர்களை வாங்க உறுதியளித்த கடற்படை !!

  • Tamil Defense
  • January 5, 2022
  • Comments Off on 60 சுதேசி கடல்சார் பல திறன் ஹெலிகாப்டர்களை வாங்க உறுதியளித்த கடற்படை !!

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே ஒரு பலதிறன் நடுத்தர ரக ஹெலிகாப்டரை வடிவமைத்து தயாரிக்க விரும்புகிறது.

தரைப்படை கடற்படை மற்றும் விமானப்படைகள் என முப்படைகளுக்கும் தனி தனியாக மூன்று வெவ்வேறு விதமான ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் முயன்று வருகிறது.

இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு சிறப்பு நடவடிக்கைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு என மூன்று வெவ்வேறு வகையான ஹெலிகாப்டர்களை தயாரித்து வழங்க HAL விருப்பம் தெரிவித்த நிலையில் இந்திய கடற்படை அதனை நிராகரித்து உள்ளது.

மேலும் இந்திய கடற்படை சிறப்பு நடவடிக்கைகள், நீர்மூழ்கி எதிர்ப்பு மற்றும் கப்பல் எதிர்ப்பு ஆகிய திறன்களை கொண்ட இரண்டு வெவ்வேறு வகையான ஹெலிகாப்டர்களை பெற விரும்புகிறது.

அந்த வகையில் 19 சிறப்பு நடவடிக்கை ஹெலிகாப்டர்கள் மற்றும் 41 நீர்மூழ்கி மற்றும் கப்பல் எதிர்ப்பு திறன் கொண்ட ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய கடற்படை HAL க்கு உறுதி அளித்துள்ளது.

இந்திய தரைப்படை மற்றும் விமானப்படைக்கான சோதனை ஹெலிகாப்டர்கள் 2023 ஆம் ஆண்டு வெளிவரும் எனவும் பல்வேறு கட்ட சோதனைகளை முடித்து 2030ஆம் ஆண்டு வாக்கில் படைகளில் இணையலாம் எனவும் கூறப்படுகிறது.