குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில், முகங்களை கண்டறியும் கருவிகள், பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு !!

  • Tamil Defense
  • January 18, 2022
  • Comments Off on குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில், முகங்களை கண்டறியும் கருவிகள், பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு !!

சமீபத்தில் தலைநகர் தில்லியின் காஸிபூர் பூ சந்தையில் குண்டு கண்டுபிடிக்கபட்டு செயலிழக்க செய்யப்பட்ட நிலையில் தலைநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

குறிப்பாக குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் ராஜபாதையை சுற்றியுள்ள பகுதிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள், 300க்கும் அதிகமான கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் முகங்களை அடையாளம் காணும் கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.

தலைநகர் தில்லி மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் புதிதாக வந்து தங்குவோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன மேலும் தில்லி காவல்துறை கமாண்டோ படையணியும் தயாராக வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் மேற்குறிப்பிட்ட முகங்களை அடையாளம் காணும் கருவிகள் சுமார் 50,000 அதிபயங்கர குற்றவாளிகளின் தரவுகளை கொண்டிருக்கும் அவற்றில் யாரேனும் ஒருவர் தென்பட்டால் கூட அடையாளம் கண்டு எச்சரிக்கை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.