
மொரிஷியஸ் நாட்டின் காவல்துறைக்கு இந்தியாவின் சொந்த தயாரிப்பான அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர் த்ருவ் வாங்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இதற்கான ஒப்பந்தம் மொரிஷியஸ் அரசு மற்றும் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் நேற்று அதாவது 19ஆம் தேதி கையெழுத்தாகி உள்ளது.
ஏற்கனவே மொரிஷியஸ் இந்தியாவின் டோர்னியர்-228 மற்றும் இந்திய தயாரிப்பு அதிவேக ரோந்து கலன்களை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்க தகவல் ஆகும்.