காணாமல் போன அருணாச்சல் இளைஞரை ஒப்படைத்த சீன ராணுவம் !!

  • Tamil Defense
  • January 28, 2022
  • Comments Off on காணாமல் போன அருணாச்சல் இளைஞரை ஒப்படைத்த சீன ராணுவம் !!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டுக்கு நண்பருடன் வேட்டையாட சென்ற போது காணாமல் போன மிரோம் டாரோன் எனும் இளைஞர் நேற்று நாடு திரும்பினார்.

அருணாச்சல பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் இந்த தகவலை வெளியிட்டு உதவி கோரிய நிலையில் இந்திய ராணுவம் இது தொடர்பாக சீன ராணுவத்தை தொடர்பு கொண்டது.

இந்த நிலையில் நேற்று கிபித்து செக்டார் பகுதியில் உள்ள வாச்சாடாமாய் எல்லை சாவடியில் டாரோமை சீன படையினர் இந்திய படையினரிடம் ஒப்படைத்தனர்.

இது பற்றிய சீன அறிக்கையில் வழிதவறி எல்லை தாண்டிய டாரோமை மனிதாபிமான அடிப்படையில் உணவு மற்றும் மருத்துவ உதவிக்கு பின்னர் திரும்ப ஒப்படைத்துள்ளதாக கூறியுள்ளது.