தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு துணை ராணுவ படைகளை அனுப்ப உள்துறை அமைச்சகம் அனுமதி !!

  • Tamil Defense
  • January 8, 2022
  • Comments Off on தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு துணை ராணுவ படைகளை அனுப்ப உள்துறை அமைச்சகம் அனுமதி !!

மத்திய உள்துறை அமைச்சகம் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு துணை ராணுவ படையணிகளை அனுப்புவதற்கு அனுமதி அளித்துள்ளது, முதல் கட்டமாக உத்திர பிரதேசத்திற்கு 225 கம்பனி வீரர்கள் செல்ல உள்ளனர்.

மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் எல்லை பாதுகாப்பு படை ஆகியவை கூட்டாக 60 முதல் 70 கம்பனிகளையும் மற்ற துணை ராணுவ படைகள் கூட்டாக 75 முதல் 80 கம்பனி வீரர்களை உத்தர பிரதேசத்திற்கு அனுப்பி வைக்க உள்ளன.

ஆக ஒரு கம்பனிக்கு 120 வீரர்கள் வீதம் ஒட்டுமொத்தமாக சுமார் 27,000 துணை ராணுவ வீரர்கள் உத்தர பிரதேசத்திற்கு தேர்தல் பாதுகாப்பு, கட்டுபாட்டு பணிகளை மேற்கொள்ள செல்கின்றனர்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா மற்றும் உத்தராகன்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் அடுத்தடுத்து தேர்தல்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.