குடியரசு தின அணிவகுப்பில் CRPF படையணியை வழிநடத்திய அதிகாரி !!

  • Tamil Defense
  • January 31, 2022
  • Comments Off on குடியரசு தின அணிவகுப்பில் CRPF படையணியை வழிநடத்திய அதிகாரி !!

கடந்த ஜனவரி 26ஆம் தேதி தலைநகர் தில்லியில் நாட்டின் 73ஆவது குடியரசு தினம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

அங்கு நடைபெற்ற அணிவகுப்பில் பல்வேறு ராணுவ மற்றும் துணை ராணுவ பிரிவுகளுடன் மத்திய ரிசர்வ் காவல்படையின் படையணி ஒன்றும் கலந்து கொண்டு வீரநடை போட்டது.

அப்படை அணியை வழிநடத்திய அதிகாரி அசிஸ்டன்ட் கமாண்டன்ட் அஜய் மாலிக் ஆவார், இவர் ஹரியானா மாநிலம் ரோஹ்தாக் நகரை சேர்ந்தவர், சட்டம் பயின்றவர் ஆவார்.

2013ஆம் ஆண்டில் மத்திய ரிசர்வ் காவல்படையில் இணைந்த இவர் அஸ்ஸாம், ஜம்மு காஷ்மீர் மற்றும் நக்சல் ஆதிக்க பகுதிகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர் ஆவார்.

மூன்று முறை மத்திய ரிசர்வ் காவல்படை இயக்குனரின் பாராட்டு வட்டுகளை வீரதீர செயலுக்காக பெற்றுள்ள இவரின் பெயர் தற்போது சிறந்த காவலுருக்கான பிரதமரின் பதக்கதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.