1 min read
கோவாவில் வெற்றிகரமாக பறந்த கடல்சார் ரஃபேல் எம் விமானம் !!
கோவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை விமான தளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி ஒடுதளத்தில்
ஃபிரான்ஸ் நாட்டு தயாரிப்பான கடல்சார் ரஃபேல் மரைன் ரக போர் விமானம் STOBAR ரக ஒடுதளத்தில் மேலேழும்பி பறக்கும் திறனை நிருபித்துள்ளது.
இதனை தொடர்ந்து இனி இந்த ரக விமானங்கள் நமது விக்ரமாதித்யா மற்றும் விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல்களில் இருந்து இயங்கி திறனை நிருபிக்க உள்ளன.
மேலும் அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பான FA-18 சூப்பர் ஹார்னெட் ரக போர் விமானமும் விரைவில் கோவா வந்து தனது STOBAR திறன்களை நிருபிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.