இரண்டே நாளில் இரண்டாவது தாக்குதல்..பாலத்தை தகர்த்து மாவோயிஸ்டுகள் அட்டகாசம்

  • Tamil Defense
  • January 24, 2022
  • Comments Off on இரண்டே நாளில் இரண்டாவது தாக்குதல்..பாலத்தை தகர்த்து மாவோயிஸ்டுகள் அட்டகாசம்

ஜார்கண்டின் கிரிதி மாவட்டத்தில் பராகர் ஆற்றில் கட்டப்பட்ட பாலத்தை மாவோயிஸ்டுகள் வெடி வைத்து தகர்த்துள்ளனர்.கிரிதா மாவட்டத்தில் இரண்டே நாளில் இது இரண்டாவது தாக்குதல் ஆகும்.

வெள்ளி அன்று இரவு இதே போன்ற மற்றொரு தாக்குதலில் இரு தொலைபேசி டவர் கோபுரங்களை மாவோயிஸ்டுகள் தாக்கியழித்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர்கள் கைதால் விரக்தியடைந்துள்ள மாவோயிஸ்டுகள் இது போன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு வருவதாக காவல் துறை வீரர்கள் கூறியுள்ளனர்.

பாலம் வெடிப்பு குறித்து பேசிய காவல்துறை எந்த மாவோயிஸ்டு குழு தாக்குதல் நடத்தியது என்பது குறித்து அறிய தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளது.