தெலுங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளுக்கான புதிய கமாண்டர் பதவி ஏற்பு !!

  • Tamil Defense
  • January 8, 2022
  • Comments Off on தெலுங்கானா மற்றும் ஆந்திர பகுதிகளுக்கான புதிய கமாண்டர் பதவி ஏற்பு !!

மேஜர் ஜெனரல் மன்ஜீத் சிங் மன்ரால் தெலுங்கானா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களை உள்ளடக்கிய TASA – Telangan Andhra Sub Area பகுதியின் கமாண்டராக பதவி ஏற்றார்.

இவர் தேசிய பாதுகாப்பு அகாடமி இந்திய ராணுவ அகாடமி ஆகியவற்றில் பயிற்சி முடித்து இந்திய தரைப்படையின் பொறியியல் படைப்பரிவில் இணைந்து பணியாற்றி வந்தவர் ஆவார்.

இவர் பூனே நகரத்தில் அமைந்துள்ள தரைப்படையின் ராணுவ பொறியியல் கல்லூரி மற்றும் தான் பயின்ற இந்திய ராணுவ அகாடமியிலேயே பயிற்சியாளராகவும் பணியாற்றிய சிறப்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.