வெளிநாடுகளில் உள்ள இந்திய ராணுவ தளங்களின் பட்டியல் !!

  • Tamil Defense
  • January 15, 2022
  • Comments Off on வெளிநாடுகளில் உள்ள இந்திய ராணுவ தளங்களின் பட்டியல் !!

இந்தியா பல்வேறு வெளிநாடுகளில் அமைத்துள்ள ராணுவ தளங்களின் விவரங்களை உள்ளடக்கிய விரிவான பட்டியலை கீழே காணலாம்.

1) தஜிகிஸ்தான்: ஃபார்கோர் விமான தளம், தலைநகர் துஷான்பேயில் இருந்து 130 கிலோமீட்டர் தென்கிழக்கே அமைந்துள்ள சிறுநகரம் தான் ஃபார்கோர். ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஈரான் உடனான இந்திய உறவுக்கு மிக முக்கியம்.

2) பூட்டான்: இந்திய ராணுவ பயிற்சி குழு (IMTRAT – Indian Military Training Team) ராயல் பூட்டான் தரைப்படை மற்றும் பூட்டான் அரச குடும்ப பாதுகாப்பு படை ஆகியவற்றிற்கு பயிற்சி அளித்து வருகிறது.

3) மடகாஸ்கர்: இந்திய பெருங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் தகவல் தொடர்பை கண்காணிக்க உதவும் கண்காணிப்பு மையம் இங்குள்ளது, 2007ஆம் ஆண்டு செயல்பட துவங்கிய இது இந்தியாவின் முதல் கண்காணிப்பு தளமாகும்.

4) மொரிஷியஸ்: மொரிஷியஸ் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள வடக்கு அகலேகா தீவு இந்திய ராணுவத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது இங்கு மிகவும் முக்கியமான ராணுவ உள்கட்டமைப்புகளை இந்தியா ஏற்படுத்தி வருகிறது.

5) செஷல்ஸ்: மொரிஷியஸ் நாட்டின் அசம்ப்ஷன் தீவில் ஒரு கடற்படை தளம் அமைக்க இருதரப்பு கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது, ஏற்கனவே இந்தியா 100 மில்லியன் டாலர் மதிப்பிலான டோர்னியர் விமானங்களை வழங்கிய நிலையில் ஒரு கண்காணிப்பு தளத்தையும் இயக்கி வருகிறது.

6) ஒமன்: ராஸ் அல் ஹாத் பகுதியில் ஒரு கண்காணிப்பு தளம், துக்கம் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் விமானப்படைகளுக்கான மையம், மஸ்கட் கடற்படை தளத்தை பயன்படுத்தி கொள்ளும் உரிமை ஆகியவை உண்டு. ஏற்கனவே மும்பை நாசகாரி கப்பலின் துறைமுகங்களில் துக்கம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

8) ஈரான்: ஈரானுடைய ஒரே துறைமுகமான சாபஹார் அந்நாடின் தென்கிழக்கு பகுதியில் ஒமன் வளைகுடாவில் அமைந்துள்ளது 2018ஆம் ஆண்டு முதல் இந்தியா இதனை இயக்கி வருகிறது.