புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய கடைசி பயங்கரவாதியும் காஷ்மீரில் கொல்லப்பட்டான் !!

  • Tamil Defense
  • January 3, 2022
  • Comments Off on புல்வாமா தாக்குதலில் தொடர்புடைய கடைசி பயங்கரவாதியும் காஷ்மீரில் கொல்லப்பட்டான் !!

ஜெய்ஷ் இ மொஹம்மது அமைப்பை சேர்ந்த சமீர் தார் எனும் பயங்கரவாதி டிசம்பர் 31ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் அனந்த்னாக் மாவட்டத்தில் கொல்லப்பட்டான்.

இதை தொடர்ந்து ஊடகங்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் காவல்துறை ஐ.ஜி விஜய் குமார் சமீர் தார் புல்வாமா குண்டுவெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய கடைசி பயங்கரவாதி என்றார்.

இவன் பயங்கரவாதிகளுக்கு குண்டு தயாரிக்க பயிற்சி கொடுத்ததும் பின்னர் படைகளை தாக்க உதவியதும், இளைஞர்களை மூளை சலவை செய்து பயங்கரவாதிகளாக மாற்றி ஆயுதங்கள் கொடுப்பது போன்ற செயல்களை செய்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.