அமெரிக்க ஆயுதங்களை பெற உள்ள ஜம்மு காஷ்மீர் காவல்துறை !!

  • Tamil Defense
  • January 9, 2022
  • Comments Off on அமெரிக்க ஆயுதங்களை பெற உள்ள ஜம்மு காஷ்மீர் காவல்துறை !!

ஜம்மு காஷ்மீர் காவல்துறை பல்வேறு வகையான படை நவீனமயமாக்கல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அந்த வகையில் தற்போது அதிநவீன ஆயீதங்களை வாங்க டென்டர் விட்டுள்ளது.

இதன்படி 500 சிக்-716 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் 100 சிக் எம்.பி.எக்ஸ் 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கிகளையும் அமெரிக்காவில் இருந்து வாங்க உள்ளது.

ஏற்கனவே 8000 குண்டு துளைக்காத உடைகள், கவச வாகனங்கள், ட்ரோன்கள் போன்றவற்றை வாங்கிய அடுத்த சில நாட்களிலேயே இந்த டென்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.