அமெரிக்கா உள்ளடக்கி அதிக வெளிநாட்டு செயற்கை கோள்களை ஏவிய இந்தியா (83%) !!

கடந்த 1999ஆம் ஆண்டு இந்தியா முதல்முறையாக ஜெர்மனி மற்றும் தென் கொரியாவின் TUBSAT மற்றும் KITSAT-3 ஆகிய வெளிநாட்டு செயற்கைகோள்களை
ஏவியது.

அதற்கு பிறகு 34 நாடுகளை சேர்ந்த 342 வெளிநாட்டு செயற்கைகோள்களை ஏவியது குறிப்பாக 2015 க்கு பிறகு மட்டுமே 83 சதவீத செயற்கைகோள்களை ஏவியுள்ளது.

மேற்குறிப்பிட்ட 83 சதவிகித செயற்கைகோள்களில் சுமார் 66 சதவிகித செயீறகைகோள்கள் அமெரிக்காவை சேர்ந்தவை ஆகும் அதாவது 342ல் 266 செயற்கைகோள்கள் ஆகும்.

இதன் காரணமாக இந்தியாவுக்கு கணிசமான அளவில் வருவாய் கிடைத்துள்ளது மேலும் நான்கு நாடுகளுடன் ஆறு செயற்கைகோள் ஏவும் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.