குடியரசு தின அணிவகுப்பில் மனம் கவர்ந்த நிகழ்வு; மனம் திறந்த இஸ்ரேலிய தூதர் !!

இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் நோவர் கிலோன் இன்று தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் தனது மனம் கவர்ந்த நிகழ்ச்சி பற்றி பதிவிட்டுள்ளார்.

அதில் ஒரு முன்னாள் இஸ்ரேலிய ராணுவ பாரா படை வீரராக இந்திய பாரா படையினர் இஸ்ரேலிய தயாரிப்பு டாவர்-21 துப்பாக்கிகளுடன் அணிவகுத்தது தனது மனதை கவர்ந்ததாக கூறினார்.

இந்த வருடம் புதிய சண்டை சீருடையுடன் தரைப்படையின் 23ஆவது பாரா ஏர்போர்ன் படையணி வீரர்கள் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.