
மும்பை நகரில் காலிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் மிகப்பெரிய அளவில் பயங்கரவாத தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து மும்பை நகரில் பாதுகாப்பு பன்மடங்கு வலுவாகி உள்ளது, அனைத்து காவலர்களில் வார, மாத விடுமுறைகள் ரத்து செய்யபட்டுள்ளன.
இது குறித்து பேசிய மும்பை மாநகர காவல் ஆணையர் கைசர் காலித் தாதர், பாந்த்ரா, சர்ச்கேட், குர்லா, CSMT ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும்
மும்பை மாநகரில் உள்ள அனைத்து ரயில்வே நிலையங்களையும் பாதுகாக்க 3000 ரயில்வே காவலர்கள் களமிறக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.