உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜெட் பயிற்சி விமானம் வெற்றிகரமாக சோதனை புதிய மைல்கல் !!

  • Tamil Defense
  • January 8, 2022
  • Comments Off on உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஜெட் பயிற்சி விமானம் வெற்றிகரமாக சோதனை புதிய மைல்கல் !!

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனமானது முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்த ஜெட் பயிற்சி விமானம் வெற்றிகரமாக சோதனையை நிறைவு செய்து உள்ளது.

IJT – Intermediate Jet Trainer அதாவது இடைநிலை ஜெட் பயிற்சி விமானம் என அழைக்கப்படும் இந்த விமானம் ஏற்கனவே விமானப்படையில் பயன்பாட்டில் உள்ள பழைய கிரண் பயிற்சி விமானங்களுக்கு மாற்றாகும்.

உயரம், வேகம், எடை சுமக்கும் திறன், என்ஜினுடைய திறன்கள், சக்தி, குறைந்த ஆயுதங்கள் போன்ற விமானப்படையின் தேவைகள் ஏற்கனவே வெற்றிகரமாக பல்வேறு சோதனைகள் மூலமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஸ்பின் டெஸ்ட் அதாவது சூழல் சோதனை மட்டும் பாக்கி இருந்தது 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சூழல் சோதனையில் இந்த விமானம் எதிர்பார்த்த முடிவுகளை எட்டவில்லை.

இந்த சோதனையில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தின் என்ஜின்களை தீடிரென நிறுத்தி விடுவர் அப்போது விமானம் சுழன்று கொண்டே தரையை நோக்கி விழும் அப்போது மீண்டும் என்ஜினை இயக்கி விமானத்தை பறக்க வைப்பார்கள்.

இத்தகைய கடினமான சோதனையில் தான் இந்த இடைநிலை ஜெட் பயிற்சி விமானமானது தனது திறன்களை நிருபித்துள்ளது ஆக மற்றொரு மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.