இந்தியாவின் அடுத்த தலைமுறை நாசகாரி கப்பல்களில் லேசர், ரெயில் கன், ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் !!

  • Tamil Defense
  • January 14, 2022
  • Comments Off on இந்தியாவின் அடுத்த தலைமுறை நாசகாரி கப்பல்களில் லேசர், ரெயில் கன், ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் !!

இந்தியாவின் அடுத்த தலைமுறை நாசகாரி கப்பல்களில் லேசர், ரெயில் கன், ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் மற்றும் வெவ்வேறு வகையான ஏவுகணைகளை ஏவும் அமைப்பு (UVLS) ஆகியவை இருக்கும்.

மேலும் வழக்கமான டீசல் என்ஜின் அமைப்புக்கு பதிலாக ஒருங்கிணைந்த மின்சார என்ஜின் உந்துதல் அமைப்பு, அடுத்த தலைமுறை ஸ்டெல்த் மற்றும் சென்சார் அமைப்புகளும் இந்த வகை அடுத்த தலைமுறை நாசகாரி கப்பல்களில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்குறிப்பிட்ட அதிநவீன ஆயுத அமைப்புகளின் உருவாக்க பணிகளில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) இந்திய கடற்படையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த கப்பல்களில் பயன்படுத்த 25-50 கிலோவாட் திறன் கொண்ட லேசர் அமைப்பு உருவாக்கப்படும் இவற்றால் கப்பலை தாக்க நெருங்கும ஏவுகணைகளை வீழ்த்த முடியும் ஆனால் கடற்படை இதை விடவும் 20 மடங்கு ஆற்றல் வாய்ந்த லேசர் ஆயுதங்கள் வேண்டும் என விரும்புகிறது.

இதுதவிர XRSAM எனப்படும் தொலைதூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் 1500 கிலோமீட்டர் தொலைவு செல்லும் LRLACM தொலைதூர தரை தாக்குதல் க்ருஸ் ஏவுகணைகள் மற்றும் கனரக ஹைப்பர்சானிக் ஏவுகணைகளும் இவற்றில் இருக்கும், UVLS அமைப்பு பெறும் முதல் இந்திய கப்பல் இது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.