மேலதிக சினூக் கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிடும் இந்திய விமானப்படை !!

  • Tamil Defense
  • January 12, 2022
  • Comments Off on மேலதிக சினூக் கனரக போக்குவரத்து ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிடும் இந்திய விமானப்படை !!

இந்திய விமானப்படையின் தலைமை தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுதிரி சமீபத்தில் வாயு ஏரோஸ்பேஸ் உடன் பேசும் போது மேலதிக சினூக் கனரக ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டியின் ஒப்புதலை இத்திட்டதிற்கு பெறும் பொருட்டு துறை ரீதியான நடவடிக்கைகள் துவங்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்திய விமானப்படை கூடுதலாக 7 சினூக் கனரக ஹெலிகாப்டர்களை வாங்க விரும்பும் நிலையில் பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி அதிகபட்சமாக 5 ஹெலிகாப்டர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய விமானப்படை லடாக், சியாச்சின் உள்ளிட்ட முன்னனி எல்லையோர பகுதிகளில் வெற்றிகரமாக சினூக் கனரக ஹெலிகாப்டர்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.