விரைவில் ஒமன் இந்திய விமானப்படைகள் கூட்டுபயிற்சி; அதிகரிக்கும் ராணுவ ஒத்துழைப்பு !!

இந்தியா வந்துள்ள ஒமன் நாட்டு பாதுகாப்பு துறை குழு பல்வேறு பேச்சுவார்த்தைகளை இந்தியாவுடன் நடத்த உள்ளது இதன்மூலம் ராணுவ ஒத்துழைப்பு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் அடுத்த கட்டமாக இந்திய தரைப்படை மற்றும் ஒமன் தரைப்படை அதிகாரிகள் சந்தித்து பேச உள்ளனர், ஏற்கனவே இருநாட்டு கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதை போல இந்த மாதம் ராயல் ஒமன் கடற்படையின் தலைமை தளபதி மற்றும் ராயல் ஒமன் விமானப்படையின் தலைமை தளபதி ஆகியோர் இந்தியா வந்து தங்கள் இந்திய சகாக்களை சந்திக்க உள்ளனர்.

மேலும் இந்தியா மற்றும் ஒமன் ஆகிய நாடுகள் இரு நாடுகளுக்கும் மிகவும் முக்கியமான அரேபிய கடல் பகுதியில் கூட்டு ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளன எனவும்

விரைவில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருநாட்டு விமானப்படைகள் ஈஸ்டர்ன் பிரிட்ஜ் எனப்படும் கூட்டு போர் பயிற்சியை நடத்த உள்ளன.

ஒமன் குழுவின் தலைவரான நாசர் அல் சாபி அவர்களுக்கு இந்திய ஆயுத தயாரிப்பு திறன்களை காட்டி ஏற்றுமதி வாய்ப்புகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.