சீனாவுக்கு செக் வைக்க முன்பை விடவும் அதிகமாக அதிகமாக ரோந்து மேற்கொள்ளும் இந்திய கடற்படை !!

  • Tamil Defense
  • January 30, 2022
  • Comments Off on சீனாவுக்கு செக் வைக்க முன்பை விடவும் அதிகமாக அதிகமாக ரோந்து மேற்கொள்ளும் இந்திய கடற்படை !!

இந்திய பெருங்கடல் பகுதியில் நாளுக்கு நாள் சீன கடற்படையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்த நிலையில் இந்திய கடற்படை சீனாவுக்கு செக் வைக்க முன்பை விடவும் அதிகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

2008 முதலே இந்திய பெருங்கடல் பகுதியில் சீன கடற்படையின் நடமாட்டம் உள்ள நிலையில் தற்போது எப்போதும் சுமார் மூன்று முதல் ஆறு சீன போர் கப்பல்களை இந்திய பெருங்கடல் பகுதியில் காண முடிவதாக கடற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார் கூறுகிறார்.

இந்திய கடற்படை அதிகாரிகள் சீன அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியும் என தெரிவிக்கும் அதே நேரத்தில் கடற்படைக்கான நிதி அளவுகள் சீன கடற்படையின் வேகத்திற்கு இணையாக இல்லை என கூறுகின்றனர்.

இந்திய கடற்படையின் பெரும்பாலான கப்பல்கள் சுமார் 20 ஆண்டுகள் பழமையானவை மேலும் மூன்றாவது விமானந்தாங்கி கப்பல் உட்பட 200 கப்பல்களை பெற வேண்டும் என்ற இலக்கிற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிடம் தற்போது 130 வெவ்வேறு விதமான போர் கப்பல்களும் சீனாவிடம் வெவ்வேறு விதமான 350 போர்க்கப்பல்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.