
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் மிலன் கடற்படை போர் பயிற்சிகள் இந்த ஆண்டு நடைபெற உள்ளது இதில் 45 நாடுகள் பங்கேற்க உள்ளன.
இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கடற்படை போர் பயிற்சியாக இருக்கும் என பாதுகாப்பு அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன, நேரடியாகவும் காணொளி மூலமாகவும் இதில் பங்கேற்க உள்ளனர்.
அடுத்த மாதம் 25 ஆம் தேதி முதல் மார்ச் 4 ஆம் தேதி வரை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்த பயிற்சி நடைபெற உள்ளது, கடந்த 1995ஆம் ஆண்டு முதல் இது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.