முன்னாள் வீரர்களுக்கு வேலை வழங்க தனியார் நிறுவனத்துடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • January 30, 2022
  • Comments Off on முன்னாள் வீரர்களுக்கு வேலை வழங்க தனியார் நிறுவனத்துடன் இந்திய கடற்படை ஒப்பந்தம் !!

இந்திய கடற்படை தனது ஒய்வு பெற்ற வீரர்களின் நலன் கருதி அவர்களின் வேலை வாய்ப்பிற்காக தனியார் வீட்டு வசதி கடன் வழங்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்திய கடற்படையின் இந்திய கடற்படை வேலைவாய்ப்பு முகமை மற்றும் IIFL வீட்டு வசதி கடன் வழங்கும் நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இதன் அடிப்படையில் தகுதியான ஒய்வு பெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கு (விதவைகள்/ குழந்தைகள் மேற்குறிப்பிட்ட நிறுவனம் வேலை வழங்கும்.

ஒப்பந்தத்தில் இந்திய கடற்படையின் பிரதிநிதியாக வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி மற்றும் IIFL வீட்டு கடன் நிறுவனத்தின் இயக்குனர் திரு. மோனு ரத்ரா ஆகியோர் கையெழுத்திட்டனர்.