சீன அச்சுறுத்தல் இந்தியாவின் நட்பு நாடுகளான ஜப்பான் ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • January 7, 2022
  • Comments Off on சீன அச்சுறுத்தல் இந்தியாவின் நட்பு நாடுகளான ஜப்பான் ஆஸ்திரேலியா இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் !!

ஆஸ்திரேலியா அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இடையே ஆஸ்திரேலியாவுக்கான அணுசக்தி தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் கட்டி தரும் ஆக்கஸ் ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தான நிலையில்,

தற்போது இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடுகளான ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் இடையே விரைவில் ஒரு இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன அச்சுறுத்தல் காரணமாக கையெழுத்தாக உள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இரண்டு நாட்டு ராணுவங்களும் ஒன்றாக இணைந்து செயல்படவும்,

ஆஸ்திரேலிய பாதுகாப்பு படைகள் மற்றும் ஜப்பானிய தற்காப்பு படைகளுக்கு இடையிலான நெருக்கம் அதிகரித்து சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள முடியும் என ஆஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி காணொளி வாயிலாக நடைபெற உள்ளது இதில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஃப்யூமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் தொடர்ந்து சீன அச்சுறுத்தல்கள் கிரணமாக தங்களது பாதுகாப்பு படைகளுக்கு செலவிடும் தொகையை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.