
கடந்த ஒரு வார காலமாக ஆழ்கடலில் பயணித்து மூன்றாவது கட்ட கடல் சோதனைகளில் பங்கேற்று தனது முழி திறனை வெளிபடுத்தி அதனை வெற்றிகரமாக நிறைவு செய்து ஐ.என்.எஸ். விக்ராந்த் விமானந்தாங்கி கப்பல் கரை திரும்பி உள்ளது.
சோதனைகளின் போது மூத்த விஞ்ஞானிகள் கடற்படை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் கப்பலின் பல்வேறு அமைப்புகள் மற்றும் இயந்திரங்கள் என்ஜின் திறன் ஆகியவை பலமுறை முழு திறனில் சோதிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து கரை திரும்பிய விக்ராந்த் கப்பலின் சோதனை முடிவ தரவுகளை சேகரித்து ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கப்பல் படையில் இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.