இராணுவ பயிற்சி விமானம் பீகாரில் விபத்து

  • Tamil Defense
  • January 28, 2022
  • Comments Off on இராணுவ பயிற்சி விமானம் பீகாரில் விபத்து

பீகாரின் கயாவில் உள்ள இந்திய இராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்திற்கு சொந்தமான பயிற்சி விமானம் இன்று விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் இருந்து விமானிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.

கயாவில் ஒரு கிராமத்திற்கு ஒதுக்குப்புறமாக இந்த விபத்து நடைபெற்றுள்ளது.பொதுமக்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானம் விபத்துக்குள்ளானதை அறிந்த கிராமத்தினர் விரைந்து வந்து விமானிகளை பத்திரமாக மீட்டனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவ வீரர்கள் இரு விமானிகளையும் பத்திரமாக கூட்டிச் சென்றனர்.

விபத்துக்குண்டான காரணம் முதற்கட்ட விசாரணைகளுக்கு பிறகே தெரிய வரும்.