வருகிற ஜனவரி 15 ஆம் தேதி தரைப்படை தினத்தன்று தலைநகர் தில்லியில் நடைபெற உள்ள விழாவில் புதிய டிஜிட்டல் சண்டை சீருடை அறிமுகம் செய்யப்படுகிறது.
இது அடுத்த ஆண்டு முதல் அனைத்து தரைப்படையினராலும் பயன்படுத்தப்படும் எனவும் தரைப்படை தலைமையக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர வழக்கமான ஆலிவ் க்ரீன் அலுவல் சீருடைகளையும் மாற்றுவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது இவை இரண்டும் இலகுவாக ஆனால் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.