வியட்நாமில் இந்திய ராணுவம் சொல்லப்படாத கதை !!

  • Tamil Defense
  • January 26, 2022
  • Comments Off on வியட்நாமில் இந்திய ராணுவம் சொல்லப்படாத கதை !!

இரண்டாம் உலகப்போரின் இறுதிகட்டத்தில் வியட்நாமில் இருந்த ஜப்பானிய படைகள் பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தின் 20ஆவது டிவிஷனிடம் சரணடைந்தனர்.

ஆகவே போர் கைதிகளை மேற்பார்வையிடுவது வியட்நாமில் அமைதியை நிலை நாட்டுவது போன்ற பணிகளிலும் வியட்நாமை காலனியாக்கிய ஃபிரெஞ்சு படையினயை வியட்நாம் மக்களிடம் இருந்து பாதுகாப்பதும் இவர்களின் பொறுப்பாக இருந்தது.

போர் முடிவுற்ற நிலையிலும் கூட வியட்நாமியர்களால் சிறைபிடிக்கப்பட்ட ஃபிரெஞ்சு மக்கள் மற்றும் வீரர்களை இந்திய படையினர் மீட்க வேண்டி இருந்தது இதனால் பல முறை பல பகுதிகளில் சண்டை மூண்டது.

இந்த சண்டைகளில் தான் வியட்நாமில் கோர்க்கா படையினர் தங்களது குக்ரி கத்திகளை பயன்படுத்தி சண்டையிட்ட அரிய நிகழ்வும் நடைபெற்றது.

பல்வேறு இடையுறுகளை தாண்டி வியட்நாமில் அமைதியை நிலை நாட்டி விட்டு இந்திய படைகள் இந்தியா திரும்பின என்பது குறிப்பிடத்தக்கது.