
இஸ்ரோ தலைவர் திரு.சோம்நாத் அவர்கள் சமீபத்தில் ஊடக நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்தார், அப்போது இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.
விண்வெளியை அமைதியான அல்லது ராணுவ ரீதியான காரணங்களுக்கும் பயன்படுத்தலாம் ஆனால் இஸ்ரோவை பொறுத்தவரை விண்வெளி ஆராய்ச்சி தான் தலையாயது ஆகவே அமைதியான நோக்கங்களுக்காகவே செயல்படுவோம் என்றார்.
மேலும் உலகளாவிய ரீதியில் விண்வெளி சுற்றுலாவுக்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன, ஆனால் இஸ்ரோவை பொறுத்தமட்டில் அதற்கான நோக்கம் என்பது ஆராய்ச்சி ரீதியானது ஆகவே விண்வெளி சுற்றுலாவில் ஈடுபட போவதில்லை எனவும்
பல்வேறு வகையான சவால்களை தாண்டி மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான், நிலாவுக்கு சந்திரயான்-3 அனுப்பும் திட்டம், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா சோலார் கருவி அனுப்பும் திட்டம் ஆகியவற்றின் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார்.
அதை போல இந்தியாவின் முதலாவ ஆழ்கடல் ஆராய்ச்சி திட்டமான சமுத்ராயனில் இஸ்ரோவின் பங்களிப்பு உள்ளதாகவும் கடலுக்குள் அனுப்பப்படும் கருவியை இஸ்ரோ தயாரிப்பதாகவும் டைட்டேனியம் உலோகத்தால் ஆன இது 6 கிலோமீட்டர் ஆழம் வரை செல்லக்கூடியது எனவும் தெரிவித்தார்.