10,000 கோடி மதிப்பிலான பிரங்கிகளை வாங்க காரணம் என்ன ??

  • Tamil Defense
  • January 24, 2022
  • Comments Off on 10,000 கோடி மதிப்பிலான பிரங்கிகளை வாங்க காரணம் என்ன ??

இந்திய தரைப்படைக்கு சுமார் 10,000 கோடி மதிப்பில் 200 கே-9 வஜ்ரா தானியங்கி பிரங்கிகளை வாங்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது, சரியான மதிப்பு 9,600 கோடி ருபாய் ஆகும்.

இத்தகைய மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை விளக்கும் சில விஷயங்களை விரிவாக பார்க்கலாம்.

இந்த வகை பிரங்கிகள் தென் கொரியாவின் தயாரிப்பு ஆகும் வட கொரியா உடனான கடுமையான கால நிலைகளில் மலை பகுதிகளில் இயங்க வடிவமைக்கப்பட்டவை ஆகும்.

இதை போன்ற சூழல்கள் தான் லடாக்கிலும் நிலவுகிறது, மேலும் இவற்றை ஏற்கனவே சில மேம்பாடுகளுடன் லடாக்கில் இந்திய தரைப்படை சீனா உடனான எல்லை கட்டுபாட்டு கோடு அருகே வெற்றிகரமாக இயக்கியது.

லடாக் மாநில தலைநகர் லேயில் இருந்து சொந்த சக்தியில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு பயணித்து இவை எல்லையை அடைந்தன, வழக்கமான பிரங்கிகளை ட்ரெய்லர் மூலம் கொண்டு செல்ல வேண்டும்.

ஆனால் லடாக்கில் களமிறக்கப்பட்ட கே9 பிரங்கிகள் பாகிஸ்தான் எல்லைக்கானவை ஆகும், இவற்றை எப்போதும் சீன எல்லையோரம் வைத்திருக்க முடியாது இரண்டு எல்லைகளையும் சமாளிக்க 10 ரெஜிமென்டுகள் தேவை.

இத்தகைய காரணங்கள் மற்றும் இவற்றின் திறன்களால் திருப்தி அடைந்த ராணுவம் இவற்றை அதிக அளவில் வாங்க விரும்பி வைத்த கோரிக்கையை மத்திய அரசு தற்போது ஏற்று கொண்டுள்ளது.

ஒரு ரெஜிமென்ட்டில் 18 பிரங்கிகள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது, இந்திய தரைப்படை ஒட்டுமொத்தமாக பல்வேறு வகையான சுமார் 3,000 பிரங்கிகளை வாங்க முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.