இந்திய தயாரிப்புகளுக்கு ஆதரவாக வெளிநாட்டு இறக்குமதியை இந்தியா நிறுத்த உள்ளதா ??

இந்தியா உலகளாவிய ரீதியில் விடுத்துள்ள ராணுவ தளவாட மற்றும் கருவிகளுக்கான ஒப்பந்தங்களை பாதுகாப்பு துறை அமைச்சகம் ரத்து செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம் ஒன்று அவற்றிற்கான மாற்றாக இந்தியாவிலேயே தயாரிப்பது அல்லது ஏற்கனவே உள்ள கருவிகளை படைகளுக்காக கொள்முதல் ஆகும்.

இந்த தகவல் உலகளாவிய ரீதியில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள மற்றும் செய்ய போகும் ஆயுத தயாரிப்பு நிறுவனங்களை கவலை அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதுவரை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் இருந்து இந்த செய்தியை ஆமோதிக்கும் அல்லது மறுக்கும் விதமான அறிக்கைகள் ஏதும் வெளியாகவில்லை.

எது எப்படியோ ஒரு சில தளவாடங்கள் மற்றும் ஆயுத அமைப்புகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் பொத்தாம் பொதுவாக வெளிநாட்டு இறக்குமதி தடை செய்யப்படாது என தெரிகிறது.