10,000 கோடி மதிப்பில் 200 கே9 வஜ்ரா பிரங்கிகள் வாங்க ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • January 24, 2022
  • Comments Off on 10,000 கோடி மதிப்பில் 200 கே9 வஜ்ரா பிரங்கிகள் வாங்க ஒப்பந்தம் !!

இந்திய தரைப்படை சுமார் 10,000 கோடி ரூபாய் மதிப்பில் 200 கே9 வஜ்ரா தானியங்கி 155 மில்லிமீட்டர் பிரங்கிகளை வாங்க ஒப்பந்தம் செய்ய உள்ளது.

லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் இந்திய வரலாற்றில் தனியார் துறைக்கு கிடைக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு துறை ஒப்பந்தம் இதுவாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சுமார் 4500 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கே9 வஜ்ரா தானியங்கி 155 மில்லிமீட்டர் பிரங்கிகளை லார்சன் அன்ட் டூப்ரோ நிறுவனம் குஜராத்தில் உள்ள ஹஸிரா தொழிற்சாலை மூலமாக இந்திய தரைப்படைக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவின் ஹான்வஹா நிறுவனத்திடம் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் தயாரிப்பு உரிமம் பெற்று இவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதும் அவற்றில் 50% இந்திய பாகங்கள் உள்ளதும் கூடுதல் தகவல் ஆகும்.