இந்தியாவின் புதிய ஸ்டெல்த் முழுமையான ஆளில்லா போர் விமானம் FUFA !!

  • Tamil Defense
  • January 5, 2022
  • Comments Off on இந்தியாவின் புதிய ஸ்டெல்த் முழுமையான ஆளில்லா போர் விமானம் FUFA !!

இந்தியாவின் வானூர்தி மேம்பாட்டு முகமை FUFA – Futuristic Unmanned Fighter Aircraft அதாவது ஒரு முழுமையான எதிர்கால ஆளில்லா போர் விமான திட்டத்தை துவங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான டென்டர் ஒன்றை வெளியிட்டுள்ள அந்த முகமை காற்று சுரங்கத்தில் சோதனை செய்ய ஒரு மாதிரி வடிவத்தை சமர்ப்பிக்குமாறு பல்வேறு நிறுவனங்கள் கல்லூரிகள் பல்கலைகழங்களிடம் கோரியுள்ளது.

இதே போன்று பல்வேறு நாடுகள் ஒரு முழுமையான ஸ்டெல்த் திறன் கொண்ட ஆளில்லா போர் விமானத்தை தயாரிக்கும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவற்றை கொண்டு ஒரு வழக்கமான போர் விமானம் மேற்கொள்ளும் CAS, SEAD, DEAD உள்ளிட்ட பல்வேறு வகையான வான் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.