முதல் தொகுதி 70000 AK-203 துப்பாக்கிகளை பெற்ற இந்தியா

  • Tamil Defense
  • January 25, 2022
  • Comments Off on முதல் தொகுதி 70000 AK-203 துப்பாக்கிகளை பெற்ற இந்தியா

ஏகே-203 துப்பாக்கிகளை இந்தியாவிற்கு வழங்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக முதல் தொகுதி 73000 துப்பாக்கிகளை இந்தியாவிற்கு இரஷ்யா டெலிவரி செய்துள்ளது.இந்தியாவின் வேண்டுதலில் பேரில் முதல் தொகுதியை தற்போது இரஷ்யா டெலிவரி செய்துள்ளது.

இந்த முதல் தொகுதி துப்பாக்கிகள் இந்திய விமானப்படைக்கு வழங்கப்பட உள்ளது.அமேதி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ள துப்பாக்கிகள் இந்திய இராணுவத்திற்கு வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெதியில் உள்ள தொழில்சாலையில் கிட்டத்தட்ட 6 லட்சம் துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன.இரஷ்யாவிடம் இருந்து முழு தொழில்நுட்ப பறிமாற்றம் பெற்று இந்த துப்பாக்கிகள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.மேலும் இந்த துப்பாக்கிகளை நட்பு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்.

இந்த துப்பாக்கிகளை இந்தியாவிற்கு வழங்க 5124 கோடிகள் செலவில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.