இரண்டு முனை போரை சந்திக்க தனது திறன்களை வலுப்படுத்தும் இந்தியா !!

சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு சிறப்பு பேட்டியளித்த தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் நரவாணே இரண்டு முனை போர் மிகப்பெரிய சவால் தான் எனினும் இந்தியா தயாராகி வருவதாக கூறியுள்ளார்.

இந்திய படைகள் இரண்டு முனை போர்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான சவால்களை சந்திக்க தயாராகி வருவதாகவும் இந்தியாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறினார்.

மேலும் SIG716, AK 203, SAKO TIKKA TRG42 போன்ற புதிய காலாட்படை ஆயுதங்கள், KO VAJRA, ATAGS, DHANUSH, PINAKA போன்ற பிரங்கி படைப்பரிவு ஆயுதங்கள், கவச வாகனங்கள், டாங்கிகள் ஆகியவை இதற்கான வலிமையை தந்துள்ளதாக கூறிய அவர்

மேலும் வான் பாதுகாப்பு படை, வானூர்தி படை பிரிவு போன்றவை படிப்படியாக நவீனப்படுத்தப்படும் எனவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், ஒருங்கிணைந்த கட்டளையகங்கள் மற்றும் தாக்குதல் படையணிகள் போன்ற மறுசீரமைப்பு திட்டங்கள் விரைவில் துவங்கும் என தெரிவித்தார்.