இந்திய பெருங்கடல், ஆஃப்ரிக்க பகுதிகளில் சீனாவுக்கு சவால் விட தயாராகும் இந்தியா !!

  • Tamil Defense
  • January 10, 2022
  • Comments Off on இந்திய பெருங்கடல், ஆஃப்ரிக்க பகுதிகளில் சீனாவுக்கு சவால் விட தயாராகும் இந்தியா !!

இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் ஆஃப்ரிக்காவில் சீனா தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் அதனை இந்தியா ராஜாங்க ரீதியாக எதிர்கொள்ள தயாராகி வருகிறது.

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள இந்திய தூதர்கள் மற்றும் வெளியுறவு துறை அதிகாரிகள் சீன வெளியுறவு அமைச்சர் அல்லது அதிகாரிகள் அந்தந்த நாடுகளுக்கு செல்வதற்கு முன்னமே தீவிரமாக செயல்பட துவங்கி உள்ளனர்.

இந்திய பிரதமர் மோடி , வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் ஆகியோர் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இதர நலன்களை நிலைநாட்ட பல்வேறு வகையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இலங்கை, மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், வங்கதேசம், நேபாளம், நைஜீரியா, பூட்டான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது.

இது தவிர இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடுகளான கொமரோஸ், செஷல்ஸ், மொரிஷியஸ், மடகாஸ்கர் போன்ற நாடுகளுடனும் சீனாவை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா அதிகமாக நெருக்கம் காட்டி வருகிறது.

சமீபத்தில் கொமரோஸ் நாட்டுக்கு சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங் யீ சுற்றுபயணமாக சென்றிருந்த அதே நேரத்தில் இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ் கேசரி அங்கு முகாமிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.