புதிய ஆண்டில் தேஜாஸின் சக்தியை அதிகரிக்கும் ஆயுத மேம்பாட்டு பணிகள் !!

  • Tamil Defense
  • January 4, 2022
  • Comments Off on புதிய ஆண்டில் தேஜாஸின் சக்தியை அதிகரிக்கும் ஆயுத மேம்பாட்டு பணிகள் !!

இந்திய விமானப்படை ஏற்கனவே பிரம்மாஸ் ஏவுகணையை சுமக்கும் திறன் கொண்ட 83 தேஜாஸ் போர் விமானங்களை ஆர்டர் செய்த நிலையில் தற்போது பல்வேறு மேம்பாடுகளையும் முன்வைத்துள்ளது.

அதாவது தேஜாஸ் போர் விமானத்தில் பல்வேறு புதிய ஆயுத அமைப்புகளை இணைத்து மேம்படுத்துமாறு இந்திய விமானப்படை ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

அந்த வகையில் பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்க பயன்படும் முற்றிலும் இந்தியாவில் வடிவமைத்து தயாரிக்கப்பட்ட அஸ்திரா மார்க்-1 ஏவுகணை இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதை போல் மற்றுமொரு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதமான SAAW எனப்படும் வானிலிருந்து தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் ஆயுதத்தை இணைக்க உள்ளனர்.

பின்னர் சமீபத்தில் ஃபிரான்ஸ் நாட்டிடம் இருந்து 1000 கிலோ எடை கொண்ட HAMMER குண்டுகளை வாங்கி தேஜாஸில் இணைக்க ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளது.

மேலும் இங்கிலாந்து நாட்டின் MBDA நிறுவனம் தயாரிக்கும் ASRAAM எனப்படும் பார்வையில் உள்ள வான் இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணையையும் தேஜாஸில் இணைக்கும் பணிகள் துவங்கி உள்ளன.

கடைசியாக மற்றொரு முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரூத்ரம் கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையையும் இலகுரக தேஜாஸ் போர் விமானத்தில் இணைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.