சுதேசி தயாரிப்பு ருத்ரம்-1 ஏவுகணையின் இறுதிகட்ட சோதனைகளுக்கு தயாராகும் இந்தியா !!

  • Tamil Defense
  • January 1, 2022
  • Comments Off on சுதேசி தயாரிப்பு ருத்ரம்-1 ஏவுகணையின் இறுதிகட்ட சோதனைகளுக்கு தயாராகும் இந்தியா !!

நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அடுத்த தலைமுறை கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணையான ரூத்ரம்-1 உடைய இறுதிகட்ட சோதனைகளுக்கு தயாராகி வருகிறது.

இந்த ஏவுகணை வானிலிருந்து ஏவப்பட கூடியது எதிரிகளின் ரேடார் மற்றும் தொலை தொடர்பு அமைப்புகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சகளை வைத்து,

அந்த அமைப்புகளின் இருப்பிடத்தை கண்டறிந்து மிகவும் துல்லியமாக தாக்கி அழித்து எதிரிகளை வலுவிழக்க செய்யும் ஒரு ஆயுதம் தான் இது.

100 கிலோமீட்டர் தாக்குதல் வரம்பை கொண்ட இந்த ஏவுகணையை நமது விமானப்படையின் மிராஜ்-2000 மற்றும் சுகோய்-30 ஆகிய போர் விமானங்களில் இருந்து ஏவ முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதிகட்ட சோதனையும் வெற்றியடையும் பட்சத்தில் ரூத்ரம்-1 ஏவுகணை தயாரிப்பு நிலையை எட்டும் பின்னர் அதிகளவில் விமானப்படையில் இணைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.